செய்திகள் :

தெலங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

post image

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மணிக்கொண்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று(சனிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது.

தீ பற்றியதையடுத்து குடியிருப்பில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | தங்கம் விலை இன்று குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

இன்று காலை 6 மணியளவில் குடியிருப்பின் 3-வது தளத்தில் சமையறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டி வெடித்தததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் எந்த பாதிப்பும் இல்லை.

தீ விபத்தினால் வீட்டில் இருந்த பணம், உடைகள் என சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

காவலர் உடையில் சைபர் செல்லுக்கே விடியோ கால்! பிறகென்ன? வைரலானது விடியோ

காவல்துறை உடையில் இருந்த மோசடி கும்பலைச் சேர்ந்த நபர், செல்போனில் விடியோ காலில் ஒருவரை அழைத்து அவரை தனது வலையில் வீழ்த்த நினைத்திருந்தார். ஆனால் போனை எடுத்ததே ஒரு போலீஸ் ஆகி, மோசடியாளருக்கு விரிக்கப்ப... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாரயண்பூர், கான்கெர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டு, பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயமடைந்துள்ளனர். சத்தீஸ்கரில் வடக... மேலும் பார்க்க

கங்குவா நடிகையின் தந்தையிடம் ரூ. 25 லட்சம் மோசடி!

உத்தரப் பிரதேசத்தில் ஜக்தீஷ் பதானிக்கு அரசியலில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் கதாநாயகியா... மேலும் பார்க்க

முந்தைய அரசுகள் வாக்குவங்கி அரசியலைப் பின்பற்றின: மோடி குற்றச்சாட்டு!

புது தில்லி: முந்தைய அரசுகள் வாக்கு வங்கி அரசியலுக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை வகுத்து வந்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஹெ.டி தலைமைத்துவ உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் கூறியது, தனது அரச... மேலும் பார்க்க

டேராடூன் கோர விபத்து: அந்தக் கடைசி நொடியில் என்ன நேர்ந்தது?

டேராடூனில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரிட்ட ஒரு பயங்கர விபத்து, காவல்துறையினரை மட்டுமல்லாமல், நாட்டையே உலுக்கியிருக்கிறது.வேகமாக இயக்கப்பட்ட ஒரு கார், 3 பெண்கள் உள்பட 6 இளைஞர்களின் உயிரைப் பறித்துச் செ... மேலும் பார்க்க

காற்று மாசு: இருமல், சுவாசப் பிரச்னையால் அவதிப்படும் தில்லி மக்கள்!

தில்லியில் தொடர்ந்து 4-வது நாளாக காற்றின் தரம் 'கடுமை' பிரிவில் உள்ளது. தில்லியில் நிகழாண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் மிகவும் மோசமானது. தீபாவளிக்கு பட்டாசுகள் விற்பனை செய்ய, வெடிக்க தடை விதித... மேலும் பார்க்க