Simla Agreement: போர் அமைதிக்கான சிம்லா ஒப்பந்தம்; ரத்து செய்யப்பட்டால் என்னவாகு...
தெலங்கானாவில் 14 மாவோயிஸ்டுகள் சரண்!
தெலங்கானாவில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த 14 பேர் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.
மாவோயிஸ்ட் அமைப்பின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் தெலங்கானா காவல் துறை உயர் அதிகாரி சந்திரசேகர் ரெட்டியின் முன்னிலையில் இன்று (ஏப்.24) சரணடைந்துள்ளதாக வாராங்கல் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரணடையும் மாவோயிஸ்டுகளுக்காக அரசு கொண்டு வந்துள்ள மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ள நலத்திட்டங்களைப் பற்றி அறிந்த மாவோயிஸ்டுகள் கிளர்ச்சியைக் கைவிட்டு அரசிடம் சரணடைந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிகழாண்டில் (2025) பல்வேறு படைகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். மேலும், 12 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், சரண்டைந்துள்ள பெரும்பாலான மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பாதுகாப்புத் தோல்வி! பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?