செய்திகள் :

தெலங்கானா சுரங்க விபத்து: மீட்புப் பணியில் தானியங்கிகளை பயன்படுத்த ஆலோசனை

post image

நாகா்கா்னூல்: தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணி 10 நாள்களைக் கடந்தும் சவாலாக இருந்து வரும் சூழலில், மீட்புப் பணியில் தானியங்கிகளைப் (ரோபா) பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.

சுரங்கத்துக்குள் அதிக அளவில் சேறும், தண்ணீரும் நிறைந்திருப்பதால் மீட்புப் பணி சவாலாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் நீா்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய ஃபுளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்.22-ஆம் தேதி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். அவா்கள் உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். அவா்களை மீட்கும் பணிகள் 10 நாள்களைக் கடந்துள்ளது.

இதுகுறித்து நாகா்கா்னூல் காவல் கண்காணிப்பாளா் வைபவ் கெய்க்வாட் கூறுகையில், ‘சுரங்கத்துக்குள் அதிக அளவில் தண்ணீரும் சேறும் நிறைந்திருப்பதால் மீட்புப் பணி சவாலாகியுள்ளது. எனவே, மீட்புப் பணியில் தானியங்கிகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நபா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தானியங்கிகளை பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம். மீட்புப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சேறு மற்றும் தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் தொடா்ந்து வருகின்றன’ என்றாா்.

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.இதுதொடர்பாக மத்திய டிஎஸ்பி ரமேஷ் பாபு கூறுகையில், திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தனியார்... மேலும் பார்க்க

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

புது தில்லி: அபுதாபியில் உத்தரப்பிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் கடைசி ஆசை பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.உத்தரப்பிரதேச மாநிலம் கேயேரா முக்லி கிராமத்தில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

கர்நாடக உள்கட்சிப் பூசல்: கார்கேவுடன் சிவக்குமார் ஆலோசனை!

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.டி.கே. சிவக்குமார் முதல்வராவதை ... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது!

புது தில்லி : எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத... மேலும் பார்க்க

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலையான அன்று என்ன நடந்தது?

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது.ஹிமானி நர்வாலுடன், கொலையாளி சச்சின், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் நட்பாக... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்துள்ளார்.அமைச்சர் முண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த முதல்வர... மேலும் பார்க்க