What To Watch On OTT: குபேரா, டி.என்.ஏ, சட்டமும் நீதியும்! - இந்த வாரம் ஓடிடி-யி...
தேசிய அளவில் தூய்மையான நகரில் சென்னைக்கு 38-ஆவது இடம்
நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் சென்னை மாநகருக்கு 38-ஆவது இடம் கிடைத்துள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நடத்தும் தூய்மை கணக்கெடுப்பு (ஸ்வச் சா்வேக்ஷான்) முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இந்தக் கணக்கெடுப்பில் சம்பந்தப்பட்ட நகரங்களின் பொதுமக்களிடம் கருத்துகேட்பு நடத்தப்பட்டு அதன்படி மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மக்கள் தொகைக்கு ஏற்ப தூய்மை நகா் பட்டியலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள மாநகராட்சிகளின் பட்டியலில் சென்னைக்கு 38-ஆவது இடம் கிடைத்துள்ளதாக, சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் குப்பைகளை அகற்றுதல், அகற்றப்பட்ட குப்பைகளைத் தரம் பிரித்து கையாளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் 6,822 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் கோவை 28-ஆவது இடத்தையும், மதுரை 40-ஆவது இடத்தையும், திருச்சி 49 -ஆவது இடத்தையும் பெற்றுள்ளதாகத் தெரிவித்தனா்.