``மகனுக்காக நாடக மன்றமே ஆரம்பிச்ச மனோரமா ஆனால்" - நினைவுகள் பகிரும் மனோரமாவின் ம...
`தேர்தல் சதி': அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டை; என்கவுன்ட்டரில் 4 ரவுடிகள் பலி! - காவல்துறை
டெல்லியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் பீகாரைச் சேர்ந்த 4 ரவுடிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில், ``பீகாரைச் சேர்ந்த ரஞ்சன் பதக் (வயது 25), பிம்லேஷ் மஹ்தோ (வயது 25), மணீஷ் பதக் (வயது 33) மற்றும் அமன் தாக்கூர் (வயது 21) ஆகியோர் பீகாரில் பல கொடூரமான வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள்.
அவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் `சிக்மா அண்ட் கம்பெனி' கும்பலைச் சேர்ந்தவர்கள். ரஞ்சன் பதக் இந்தக் கும்பலின் தலைவராக இருந்தார்.

பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பதக், அவரது மூன்று கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு பெரிய சதித்திட்டத்தைத் தீட்டியதாகத் தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து பதக் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.25,000 பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் அவர்கள் இருப்பதாகத் தகவல் கிடைதது.
அதன் அடிப்படையில் தேடப்பட்டவர்களுக்கும் டெல்லி மற்றும் பீகார் காவல்துறையினருக்கும் இடையே ரோஹினியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சௌக்கிலிருந்து பன்சாலி சௌக் வரை பகதூர் ஷா மார்க்கில் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் அந்த 4 பேரும் சுடப்பட்டனர். அதைத் தொடர்ந்து 4 பேரையும் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.