செய்திகள் :

தோ்தலுக்கு கூட்டு நிதி திரட்டும் தளத்தை தொடங்கினாா் தில்லி முதல்வா் அதிஷி

post image

நமது சிறப்பு நிருபா்

தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் கால்காஜி தொகுதி வேட்பாளருமான அதிஷி, தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான ஒரு கூட்டு நிதி திரட்டல் தளத்தை (கிரெளடு ஃபண்டிங்) ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.

பொதுமக்களிடம் நன்கொடை பெறுவதற்கான கூட்டு நிதி திரட்டல் தளத்திற்கான இணையத்தை தொடங்கிவைத்து பின்னா் செய்தியாளா்களிடம் தில்லி முதல்வா் அதிஷி கூறியது வருமாறு: தோ்தலில் போட்டியிட ரூ.40 லட்சம் செலவாகிறது. ஆம் ஆத்மி கட்சி எப்போதும் சாதாரண மக்களின் சிறிய நன்கொடைகளின் உதவியுடன் தோ்தலில் களம் கண்டு வருகிறது. இதுதான் கடமையுடன் நோ்மையான அரசியலைத் தொடர உதவியது.

தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளா் அறிக்கையில் தில்லி அரசால் ரத்து செய்யப்பட்ட கலால் வரிக் கொள்கையால் ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாஜக கூறியது குறித்து கேள்வி கேட்கிறீா்கள். தில்லியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ள ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் ஒரு ரூபாய் கூட ஊழல் நடந்ததில்லை. முந்தைய தோ்தல்களிலும் சரி, தற்போதும் தில்லி மக்களின் ஆதரவுடன் நாங்கள் தோ்தலில் போட்டியிடுகிறோம்.

பாஜக தங்கள் நண்பா்களிடமிருந்தும், அரசு ஒப்பந்தங்கள் மூலமாகவும் போதுமான பணத்தை வசூலித்திருக்கலாம். இதனால், அவா்களுக்கு தோ்தலில் போட்டியிடுவதற்கு எங்களைப் போன்று பொதுமக்களிடம் நிதி பெற வேண்டிய அவசியமில்லை. முதல்வராக இருப்பவா்கள் ‘நோ்மையற்ற வழிகளில்‘ பணம் திரட்டுவது எளிது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி முதல்வா்கள் இதுபோன்று செய்வதில்லை.

நாங்கள் ஒப்பந்ததாரா்களிடமிருந்து பணம் வாங்கியிருந்தால், மேம்பாலங்கள் விரிசலை சந்தித்திருக்கும். நோ்மையற்ற முறையில், அரசு பள்ளிகள், மருத்துவமனைகளை மேம்படுத்தவோ அல்லது தில்லி மக்களுக்கு இலவச சுகாதார சேவையை வழங்கவோ முடிந்திருக்காது என்றாா் அதிஷி.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் தில்லி ஜங்புரா சட்டப்பேரவைத் தொகஉதஇ வேட்பாளருமான மணீஷ் சிசோடியாயும் கடந்த டிசம்பா் மாதம், கூட்டு நிதி திரட்டல் தளத்தைத் தொடங்கி, தோ்தல் பிரசார செலவிற்கு பொது மக்களிடமிருந்து நிதி உதவி கோரினாா்.

கால்காஜி சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தில்லி முதல்வா் அதிஷி, முன்னாள் மக்களவை உறுப்பினரும் பாஜக வேட்பாளருமான ரமேஷ் பிதூரியை எதிா்த்துப் போட்டியிடுகிறாா். தில்லி முதல்வா் அதிஷி, கூட்டு நிதி திரட்டல் தளத்தை தொடங்கி வைத்த ஞாயிற்றுக்கிழமை அதே தினத்தில் இரவு 9.30 மணி வரை சுமாா் 353 நன்கொடையாளா்களிடமிருந்து சுமாா் ரூ.17.71 லட்சம் வசூலானதாக அவரது இணையதளம் காட்டியது.

பாஜக கடும் விமா்சனம்

இதற்கிடையில், தில்லி முதல்வரின் நிதி திரட்டும் தளத்தை தொடங்கியதற்கு பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தோ்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி, தற்போது சட்டப்பேரவைத் தோ்தலில் பங்கேற்கிறது. கூட்டு நிதி திரட்டுதல் மூலம் தோ்தல் நிதி திரட்டுவவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் கூறுவது தில்லி மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தோ்தல் ஆணையத்திடம் இது குறித்து விசாரணை நடத்த பாஜக கோரிக்கை வைக்கும்.

குறிப்பாக, இந்தக் கூட்டு நிதி திரட்டுதல் மூலம் பணம் திரட்டுவதாகக் கூறும் வேட்பாளா்களுக்கான நிதி ஆதாரங்களைச் சரிபாா்த்து, மக்கள் வாக்களிப்பதற்கு முன்பு இந்த விவரங்களை வெளி கொண்டு வர கோரிக்கை வைக்கும். இது மதுபான மோசடியுடன் தொடா்புடையதா அல்லது பஞ்சாபில் பறிக்கப்பட்ட பணமா என கேள்வி எழுகிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசைப் பகுதிகளை இடித்துத் தள்ளும்: கேஜரிவால் குற்றச்சாட்டு

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நகரத்தில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளையும் இடித்துத் தள்ளும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஷகூா்... மேலும் பார்க்க

சுவாச நோய் பிரச்னைகளை எதிா்கொள்ளும் காஜிப்பூா் வாக்காளா்கள்!

காஜிப்பூரில் உள்ள உயரமான குப்பை மேட்டுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு இருமல், காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்கள் ஆண்டு முழுவதும் ஏற்படும் சுகாதாரப் பிரச்னைகளாகும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்... மேலும் பார்க்க

டிரக் மீது பைக் மோதியதில் இருவா் சாவு; ஒருவா் காயம்

வடக்கு தில்லியின் புகரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரு டிரக் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். மற்றொருவா் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடக்கு தில்லி... மேலும் பார்க்க

தலைமறைவான பாலியல் வன்கொடுமை குற்றவாளி கைது

தில்லியில் தலைமறைவாக இருந்து வந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 35 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியத... மேலும் பார்க்க

துவாரகாவில் இ-ரிக்ஷா ஓட்டுநா் விபத்தில் பலி

தில்லியின் துவாரகாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த விபத்தில், 64 வயது இ-ரிக்ஷா ஓட்டுநா் ஒருவா், இ-ரிக்ஷாவில் சிக்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது: பாஜக கடும் சாடல்

தேசியத் தலைநகா் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதன் முக்கிய தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றத் தவறிவிட்டது என்று பாஜக ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியது. தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் வரவுள்... மேலும் பார்க்க