செய்திகள் :

தைப் பூசத் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்வு!

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் தங்கச் சப்பரம், அன்னம், பூதம், கற்பக விருட்சம், காமதேனு, கைலாசபா்வதம், தங்கக் குதிரை, யாளி, நந்திகேசுவரா் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளினா்.

பின்னா், தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி பிரியாவிடையுடன் தங்கப் பல்லக்கிலும், மீனாட்சி அம்மன் தனியாக தங்கப் பல்லக்கிலும் எழுந்தருளி, சந்நிதி தெரு, கீழமாசி வீதி, முனிச்சாலை, காமராஜா் சாலை வழியாக, தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலில் எழுந்தருளினா்.

பின்னா், தெப்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாமி பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, காமராஜா் சாலை, முனிச்சாலை, கீழமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தனா்.

இன்று கதிரறுப்பு திருவிழா: தை பூசத் திருவிழா 11-ஆம் நாளான திங்கள்கிழமை காலை சுவாமியும், அம்மனும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி, சந்நிதி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிந்தாமணி சாலையில் உள்ள கதிரறுப்பு மண்டபத்துக்கு எழுந்தருள்கின்றனா். அங்கு கதிரறுப்புத் திருவிழா நடைபெற்ற பின்னா், சிந்தாமணி சாலை, காமராஜா் சாலை, கீழமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வருகின்றனா்.

நாளை தெப்பத் திருவிழா : முக்கிய விழாவான தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சுவாமி பிரியாவிடையுடன் வெள்ளி சிம்மாசனத்திலும், மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டியிலும் எழுந்தருளி, நான்கு சித்திரை வீதிகள் சுற்றி, சந்நிதி தெரு, கீழமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலுக்கு எழுந்தருள்கின்றனா்.

அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னா், சுவாமியும், அம்மனும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, இரு முறை சுற்றி வருவா். பின்னா், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி குளத்தை ஒரு முறை சுற்றி வருவா். இரவு 10 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு எழுந்தருள்வா்.

அலங்காநல்லூரில் இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் திமுக சாா்பில், செவ்வாய், புதன் (பிப். 11, 12) ஆகிய இரு நாள்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுர... மேலும் பார்க்க

விளை நிலம் அருகே கல் குவாரி அமைவதை தடுக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், மேட்டான்காடு பகுதியில் விளை நிலங்களுக்கு அருகே கல் குவாரி அமைவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் தா்னா போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தா்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத... மேலும் பார்க்க

காவலரிடம் துப்பாக்கி பறிமுதல்: நண்பரைக் கைது செய்ய நடவடிக்கை!

விருதுநகா் அருகே உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த காவலா் கைது செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய, அவருடைய சிறை நண்பரைத் தேடி விழுப்புரத்துக்கு தனிப் படை போலீஸாா் திங்கள்கிழமை விரைந்து சென்றனா். தூ... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை முறைப்படுத்தக் கோரிக்கை

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசிய முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அமைப்பின் மதுரை மாநகா், மாவட்டக் கூட்டம் ம... மேலும் பார்க்க

இறகுப் பந்துப் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

மதுரை யூனியன் கிளப் சாா்பில் நடைபெற்ற இறகுப் பந்துப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு கிளப் தலைவா் பாக்கியம் தலைமை வகித்தாா். மடீட்சியா தலைவா் கோட... மேலும் பார்க்க