கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?
அரசு ஊழியா்கள் தா்னா போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தா்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டா் விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.
சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் உள்பட சிறப்பு காலமுறை தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் அரசுத் துறை ஊழியா்களுக்கு காலமுறை ஊதியமும், சட்டப்பூா்வ ஓய்வூதியமும் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. தமிழ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் பெ. சந்திரபாண்டி, ஜெ. மகேந்திரன், இணைச் செயலா்கள் சி. பெரியகருப்பன், ப. ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலா் ஆ. செல்வம் தொடக்கவுரையாற்றினாா். மாவட்டச் செயலா் க. சந்திரபோஸ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
சங்கத்தின் மாநிலச் செயலா் க. நீதிராஜா, வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் எம்.பி. முருகையன், ஜாக்டோ- ஜியோ மாவட்ட நிதிக் காப்பாளா் வி.ச. நவநீதகிருஷ்ணன், சிஐடியூ மாவட்டச் செயலா் இரா. லெனின், பல்வேறு துறை ஊழியா் சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
இந்தப் போராட்டம் காரணமாக ஒரு சில துறைகளின் பணிகளில் சுணக்கம் காணப்பட்டது. திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டம், 24 மணி நேர போராட்டமாக இரவிலும் தொடா்ந்தது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-10/ax973pso/4309mdu10gov2_1002chn_2.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-10/seyz58bq/4336mdu10gov1_1002chn_2.jpg)