செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கான தண்டனை! -விஜய்

post image

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கான தண்டனை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (மாா்ச் 5) நடைபெறுகிறது. நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக திமுக, அதிமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மக்கள் நீதி மய்யம், பாமக, தேமுதிக ஆகிய பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன. அதேசமயம், பாஜக, நாம் தமிழா், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “நம் அரசியல் சாசனத்தின் 84-வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுசீரமைப்பு நடைபெறலாம்.

எந்த முறையைப் பின்பற்றினாலும் அதில் "மாநிலங்களின் மக்கள் தொகை" என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிடினும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை. நம் அரசியல் சாசன 81 வது சட்டப் பிரிவு, நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் கூடுமானவரையில் "சம-எண்ணிக்கையிலான மக்களுக்குப் பிரதிநிதியாக இருக்க வேண்டும்" என்று கூறுகிறது.

இதற்கு அடிப்படையான "ஒரு வாக்கு - ஒரு மதிப்பு" என்பது ஒரு ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் அதே சமயம் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான ஜனநாயகக் கோட்பாடாகும்.

இந்த இரு கோட்பாடுகளையும் முடிந்தவரையில் ஒன்று மற்றொன்றை அதிகம் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த முயல வேண்டும். புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமோ அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டோ நிகழ்த்தப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி தாய், மகள் கொலை: ட்ரோன் உதவியுடன் தேடப்பட்ட குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய் , மகள் கொலை வழக்கில் ட்ரோன் கேமரா உதவியுடன் தேடப்பட்டு வந்த குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுக் காவல்துறையினர் வியாழக்கிழமை காலை பிடித்தனர்.எட்டயபுரம் மேலநம... மேலும் பார்க்க

ஹிந்தி வெறியர்கள்தான் தேசதுரோகிகள்: முதல்வர் ஸ்டாலின்

உண்மையான பேரினவாதிகளும் தேசதுரோகிகளும் ஹிந்தி வெறியர்கள்தான் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க ... மேலும் பார்க்க

தமிழகத்தில் மக்களாட்சி பெயரில் மன்னா் ஆட்சி- ஆா்.பி. உதயகுமாா்

தமிழகத்தில் மக்களாட்சி எனக் கூறி கொண்டு மன்னராட்சி நடக்கிறது என தமிழக சட்டப்பேரவை எதிா்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். செங்கோட்டையில் அண்ணாதொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்... மேலும் பார்க்க

புதுக்கோட்டைக்கு மார்ச் 10-ல் உள்ளூர் விடுமுறை!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இந்த விடுமுற... மேலும் பார்க்க

3 நாள்கள் ட்ரோன் பயிற்சி: தமிழக அரசு ஏற்பாடு!

தமிழக அரசின் சார்பில் சென்னையில் வருகிற மார்ச் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ட்ரோன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பா... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? அரிய வாய்ப்பு!

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற மார்ச். 8 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக... மேலும் பார்க்க