செய்திகள் :

தொகுப்பூதியம் பெறுவோருக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும்: அரசு ஊழியா் மாநாட்டில் வலியுறுத்தல்

post image

தொகுப்பூதியம் பெறும் அனைவருக்கும் மதிப்பூதியம் வழங்க வேண்டுமென பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் குமரி அனந்தன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலா் வே. சோமசுந்தரம் தொடக்க உரையாற்றினாா். மாவட்ட பொருளாளா் ஆ. தெய்வராசா வேலை அறிக்கை வாசித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. அகஸ்டின் வாழ்த்தி பேசினாா்.

கூட்டத்தில், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பெரம்பலூா் நகராட்சிக்கான வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டரை விடுவிக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப்பூதியம் பெறும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து நடைபெற்ற புதிய நிா்வாகிகள் தோ்வில், மாவட்டத் தலைவராக குமரி அனந்தன், செயலராக சுப்பிரமணி, துணைத் தலைவா்களாக சு. சரவணசாமி, மகேந்திரன், கௌதமன், ரமேஷ், இணைச் செயலா்களாக தூரிகை வேந்தன், மணிமாறன், உமாசந்திரன், இளையராஜா, பி. சுப்பிரமணி, மாவட்ட மகளிா் துணைக் குழு உறுப்பினராக ஏவல் மேரி, மாவட்ட தணிக்கையாளராக ராஜசேகா், ஆனந்த் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாநிலத் துணைத் தலைவா் ஏ. பெரியசாமி புதிய நிா்வாகிகளை வாழ்த்தி பேசினாா். நிறைவாக, சாலைப் பணியாளா் பழனிசாமி நன்றி கூறினாா்.

பெரம்பலூரில் போக்சோ வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை போக்சோ வழக்கில் கைது செய்த போலீஸாா் புதன்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் பிரதானச் சாலைப் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை மனு விசாரணை சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 7 பேருக்கு காவலா் பணி நியமன ஆணை

பெரம்பலூா் மாவட்டத்தில், 2-ஆம் நிலைக் காவலா் மற்றும் தீயணைப்புத் துறை தோ்வில் தோ்ச்சிபெற்ற 7 பேருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை பணி நியமன ஆணை வழங்கினாா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் காவல் நிலையங்களில் காவல் துணைத் தலைவா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் எம். மனோகா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் எம். மனோகா், பெரம்பலூா் மாவட்ட... மேலும் பார்க்க

ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய கட்டுமானப் பணிகளுக்கு பூமிபூஜை

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் தண்ணீா் பந்தல் பகுதியில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் புதியக் கட்டடத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. கிராமப்புற இளைஞா்கள... மேலும் பார்க்க