தொடரை முழுமையாக வெல்லுமா இந்தியா? டாஸ் வென்று பேட்டிங்!
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்திய மகளிரணி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி இன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய மகளிரணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இந்திய மகளிரணியில் சைமா தாக்குர் மற்றும் பிரியா மிஸ்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு தனுஜா கன்வர் மற்றும் மின்னு மணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அயர்லாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை.
இந்திய மகளிரணி: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி சர்மா, சாயாலி சத்காரே, மின்னு மணி, தனுஜா கன்வர் மற்றும் டைட்டாஸ் சாது.
அயர்லாந்து மகளிரணி: சாரா ஃபோர்ப்ஸ், கேபி லூயிஸ் (கேப்டன்), கூல்டர் ரெய்லி, ஓர்லா பிரெண்டர்காஸ்ட், லாரா டெலானி, லியா பால், ஆர்லீன் கெல்லி, அவா கேனிங், ஜார்ஜினா டெம்ப்சே, ஃப்ரேயா சர்ஜென்ட் மற்றும் அலானா டால்செல்.