தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்! மு.க. அழகிரி வருகை!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்து மு.க.அழகிரி நலம்விசாரித்தார்.
வயது முதிா்வு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வந்த தயாளு அம்மாளுக்கு திடீரென நேற்றிரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
தற்போது தயாளு அம்மாளின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வரும் நிலையில், அவரது மூத்த மகன் அழகிரி மருத்துவமனைக்கு நேரில் வந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்றிரவு நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று நலம்விசாரித்தார்.