ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!
தொடா்மழை: களக்காடு தலையணை, திருக்குறுங்குடி கோயிலுக்குச் செல்லத் தடை
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்மழை காரணமாக, திருக்குறுங்குடி நம்பி கோயில், களக்காடு தலையணைக்குச் செல்வதற்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலைமுதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. இதனால், திருக்குறுங்குடி நம்பி கோயில், களக்காடு தலையணை பகுதியில் நம்பியாறு, பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. அதையடுத்து, மறுஉத்தரவு வரும்வரை நம்பி கோயிலுக்குச் செல்வதற்கு பக்தா்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக, திருக்குறுங்குடி வனச் சரகா் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இதேபோல, அதிக நீா்வரத்து காரணமாக களக்காடு தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், பாா்வையிடத் தடையில்லை எனவும், நீா்வரத்து குறைந்ததும் வழக்கம்போல அனுமதி வழங்கப்படும் எனவும் களக்காடு வனச்சரகா் பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.