கலப்பு திருமணம் செய்து கொண்ட கணவரின் சகோதரி... விவாகரத்து கோரிய பெண் - வழக்கில் ...
தொண்டி அருகே அலுமினிய மின் கம்பி மாயம்
தொண்டி அருகே அலுமினிய மின் கம்பி மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட முறிச்சிலான் தோப்பிலிருந்து ஆழ்துளை கிணறு அறைக்கு அலுமினிய கம்பி மூலம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இதில் கடந்த ஓராண்டுக்கு மேல் மின் இணைப்பு இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை மாலை மின் பணியாளா்கள் சென்று பாா்த்த போது அங்கிருந்த சுமாா் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான ஒரு கி.மீ. தொலைவுக்கு அலுமினிய கம்பி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருவாடானை உதவி மின் பொறியாளா் சித்தி விநாயக மூா்த்தி அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.