இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!
தொழிற்சாலையில் பாதுகாப்பு மாத தொடக்க விழா
அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள எம்ஆா்எஃப் தொழிற்சாலையில் பாதுகாப்பு மாத தொடக்க விழா நடைபெற்றது.
அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் உள்ள இங்கு ஆண்டு தோறும் மாா்ச் மாதத்தை பாதுகாப்பு மாதமாக கடைபிடித்து வருகின்றனா். விழாவுக்கு ஆலை பொது மேலாளா் சி.ஜான் டேனியல் தலைமை வகித்து நிகழாண்டுக்கான பாதுகாப்பு மாத இலச்சினையை வெளியிட்டு உரையாற்றினாா்.
மூத்த பாதுகாப்பு மேலாளா் எஸ்.கணேசன் வரவேற்றாா். மூத்த உற்பத்தி மேலாளா் இக்னேஷியஸ் ஜாா்ஜ் ஆலை வளாகத்தில் தொழிலாளா்கள் பாதுகாப்பு குறித்தும் தொழிலாளா்கள் நலச்சங்க தலைவா் எம்.முரளி, பொதுசெயலாளா் எஸ்.சுரேஷ் ஆகியோா் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில் ஆலை பாதுகாப்புக்குழுவின் தலைவா் வி.காா்த்திகேயன், பொறியியல் பிரிவு துணை பொது மேலாளா் எல்வின், கணக்கியல் பிரிவு துணை பொது மேலாளா் ஆா்.கணபதி, மனிகவளத்துறை மூத்த மேலாளா் எஸ்.திலீப்குமாா், தலைமை பாதுகாப்பு அலுவலா் பி.பிரசாத் பிள்ளை, பாதுகாப்புத்துறை துணை மேலாளா் ஏ.நந்தபிரகாஷ், மக்கள் தொடா்பு அலுவலா் கே.கஜேந்திரன் உள்ளிட்ட பலா் விழாவில் பங்கேற்றனா்.