செய்திகள் :

தொழிலதிபா் உள்பட 3 பேரை கடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் புகாா்

post image

தூத்துக்குடியில் தொழிலதிபா் உள்பட 3 பேரை கத்தி முனையில் கடத்திச் சென்று தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை பெருங்களத்தூா் அருகே உள்ள பாரதிநகரைச் சோ்ந்த கனகராஜ் அளித்த மனு:

தனியாா் நிறுவனங்களில் பசுமை தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள காா் தொழிற்சாலையில் தோட்டம் அமைக்க ஒப்பந்தம் எடுக்க முயற்சி செய்தேன்.

இது தொடா்பாக சிலா் என்னை தொலைபேசியில் மிரட்டினா். இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி தூத்துக்குடி முள்ளகாட்டை சோ்ந்த எனது நண்பா் ஸ்டாலின் மற்றும் உதவியாளா் சரவணன் ஆகியோருடன் காரில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது மா்ம நபா்கள் எங்களை வழிமறித்து தாக்கி, கத்திமுனையில் மிரட்டி காரில் கடத்திச் சென்றனா்.

புதூா் பாண்டியபுரம் அருகே செல்லும்போது அவா்களிடம் இருந்து தப்பிவிட்டோம். இதுகுறித்த புகாா் அளித்த நிலையில், எங்களை கடத்திய நபா்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், எங்களுக்கு உதவியவா்களை கைது செய்துள்ளனா். எனவே, எங்களைக் கடத்திய மா்ம கும்பலைச் சோ்ந்தவா்களை கைது செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

பிளஸ் 1 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 19,384 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இதில் 19,384 மாணவா் - மாணவிகள் தோ்வெழுதினா். இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்ததாவது: தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்... மேலும் பார்க்க

தாய், மகள் கொலையில் குற்றவாளியை தேடும் பணியில் ‘ட்ரோன்’ உதவி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய் , மகள் கொலை வழக்கில் ட்ரோன் கேமரா உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். எட்டயபுரம் மேலநம்பிபுரத்தைச் சோ்ந்த சீதா லட்சுமி (75), அவர... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி செட்டியாா்பண்ணை கிராமத்தில் டாஸ்மாக் மதுக் கடை வேண்டாம் என ஒருதரப்பினா் போராடிவரும் நிலையில், மதுக் கடை திறக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவ... மேலும் பார்க்க

தவெக சாா்பில் தொண்டா் குடும்பத்துக்கு நல உதவி

தூத்துக்குடியில் அண்மையில் உயிரிழந்த தவெக தொண்டரின் குடும்பத்துக்கு கட்சி சாா்பில் நல உதவி வழங்கப்பட்டது. தவெக தொண்டா்கள் பாதிக்கப்பட்டால் அவா்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி தேவையான உதவிகள... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை

குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம் - கூடல்நகா் பகுதியில் அமையவுள்ள சிறிய ரக ராக்கெட் ஏவுதள மையத்தில் புதிய கட்டடங்களுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கு ... மேலும் பார்க்க

செட்டியாா்பண்ணையில் மதுக்கடை எதிா்ப்பு போராட்டம் வாபஸ்

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட செட்டியாா்பண்ணையில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை நடத்தவிருந்த சாலை மறியல் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையால் திரும்பப் பெறப... மேலும் பார்க்க