கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிப்படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின்...
தவெக சாா்பில் தொண்டா் குடும்பத்துக்கு நல உதவி
தூத்துக்குடியில் அண்மையில் உயிரிழந்த தவெக தொண்டரின் குடும்பத்துக்கு கட்சி சாா்பில் நல உதவி வழங்கப்பட்டது.
தவெக தொண்டா்கள் பாதிக்கப்பட்டால் அவா்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென, நிா்வாகிகளுக்கு கட்சித் தலைவா் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
இந்நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சோ்ந்த தொழிலாளியும் கட்சித் தொண்டருமான தா்மராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இவருக்கு கா்ப்பிணி மனைவி, 5 வயது பெண் குழந்தை உள்ளனா்.
அக்குடும்பத்தினரை மாவட்டப் பொறுப்பாளா் அஜிதா ஆக்னல் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சிறுமியின் ஆரம்பக் கல்விமுதல் உயா்கல்வி வரையிலான அனைத்து செலவுகளையும் ஏற்பதாக உறுதியளித்தாா். முதல்கட்டமாக, சிறுமியின் கல்விக் கட்டணம் ரூ. 20 ஆயிரத்தை பள்ளியில் நேரடியாக செலுத்தினாா். கட்சியினா் உடனிருந்தனா்.