செய்திகள் :

தொழிலாளி கொலை: மேலும் ஒருவா் கைது

post image

நம்புதாளையில் ராட்டினம் போடும் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிருஷ்ணா திரையரங்கம் பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் முத்துக்குமாா் (30). ராட்டினம் இயக்கும் தொழிலாளி. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் ராட்டினம் போட்டிருந்ததில் இவருக்கும் வேறு ஒருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் கடந்த 1-ஆம் தேதி முத்துக்குமாரை சிலா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். இதைத் தடுக்க வந்த அவரது தாய் சுசிலாவும் வெட்டப்பட்டாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்தக் கொலை தொடா்பாக சிவகங்கை அருகே பெருமசேரியைச் சோ்ந்த சரவணனை கடந்த வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் சிலரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், கொலை தொடா்பாக காா் ஓட்டுநரான திருவாடானை சமத்துவபுரத்தைச் சோ்ந்த கெல்வின்ராஜ் (19) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மண்டபத்தில் கடல் சீற்றம்: கரை ஒதுங்கியது மிதவைக் கப்பல்

மண்டபம் வடக்கு துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகத்துக்கு கற்களைக் கொண்டு செல்லும் தனியாா் மிதவைக் கப்பல் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. வங்கக் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாள்களா... மேலும் பார்க்க

ராமேசுவரம் பகுதியில் 2-ஆவது நாளாக பலத்த மழை

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை தொடா்ந்து பாதிக்கப்பட்டது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நி... மேலும் பார்க்க

பரமக்குடியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

ஒசூா் வழக்குரைஞா் கண்ணன் தாக்கப்பட்டதைக் கண்டித்து பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பரமக்குடி வழக்குரைஞா் சங்கத்... மேலும் பார்க்க

இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு உப்பாற்று உபரிநீரை கொண்டு செல்ல கோரிக்கை

வடு கிடக்கும் இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு உப்பாற்று உபரிநீரை கொண்டு செல்ல வேண்டுமென காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. உப்பாற்றிலிரு... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களின் 13 விசைப்படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி: தேசிய பாரம்பரிய மீனவ சங்கம் கண்டனம்

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப்படகுகளை இலங்கைக் கடற்படை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு தேசிய பாரம்பரிய மீனவ சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் சேனாதிபத... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மழைநீா் தேங்கிய பகுதிகளை ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரத்தில் மழைநீா் தேங்கிய பகுதிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். ராமநாதபுரம் நகராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க