செய்திகள் :

தோல்வி பயத்தில் கேஜரிவாலுக்கு பதற்றம்: மோடி

post image

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் கேஜரிவால் பதற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் தனித்தனியே மோதுகின்றன.

இதையும் படிக்க : ஆளுநருக்கு நடத்தை விதிகள்! திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்!

இந்த நிலையில், வடகிழக்கு தில்லி சட்டப்பேரவைக்கு உட்பட்ட கோண்டாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

“பிப்ரவரி 8 ஆம் தேதி தில்லியில் அமையவுள்ள பாஜக அரசு, அனைத்து வாக்குறுதிகளையும் குறிப்பிட்ட நாள்களில் நிறைவேற்றும். இதுவே மோடியின் வாக்குறுதி.

ஆம் ஆத்மியின் பொய்யான வாக்குறுதிகள் மக்களிடம் வேலை செய்யாது என்பது இங்கு கூடியுள்ள கூட்டத்தால் தெரிகின்றது. ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும், தில்லியை நவீனமயமாக்கும் இரட்டை என்ஜின் பாஜக அரசை மக்கள் விரும்புகிறார்கள். பிப். 5 ஆம் தேதி ஆம் ஆத்மி விலகி பாஜக வரும்.

தில்லியின் முன்னாள் முதல்வர் ஹரியாணா மக்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ஆம் ஆத்மி பதற்றமடைந்துள்ளது. ஹரியாணா மக்கள் தில்லி மக்களிடமிருந்து வேறுபட்டவர்களா? ஹரியாணா மக்களின் உறவினர்கள் தில்லியில் வசிக்கவில்லையா? தில்லி மக்கள் குடிக்கும் யமுனை ஆற்றில் எப்படி ஹரியாணா மக்கள் விஷம் கலப்பார்கள்? ஹரியாணா மக்கள் அனுப்பு தண்ணீரைதான் பிரதமர், நீதிபதிகள் உள்பட அனைவரும் குடிக்கிறோம்.

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியின் 25 ஆண்டுகால ஆட்சியை நீங்கள் பார்த்துவிட்டீர்கள். இரண்டு தலைமுறையை அழித்துள்ளனர். இன்னும் போக்குவரத்து நெரிசல், வெள்ளம், காற்றுமாசு இருக்கின்றது. உங்களின் ஒரு வாக்கு அனைத்தையும் மாற்றிவிடும். 11 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ள பணிகளையும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான பணிகளையும் நாங்கள் செய்யவுள்ளோம். ஒருமுறை தாமரைக்கு வாய்ப்பு அளியுங்கள்” எனத் தெரிவித்தார்.

சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை: உச்சநீதிமன்றம்

நாட்டில் சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை’ என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. தனது முன்னாள் மனைவி ஐபிஎஸ் என்பதால் தனக்கு வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உத்தரபிரதேசத்த... மேலும் பார்க்க

நிஜ்ஜாா் கொலையை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரமில்லை: கனடா தூதரகம்

நிஜ்ஜாா் கொலையில் அந்நிய நாட்டுக்கு (இந்தியா) நிச்சயம் தொடா்பிருப்பதை நிரூபிக்க முடியவில்லை என்று கனடா ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிஜ்ஜாா் கொலை வழக்கை விசாரிக்க அந்த ஆணையத்துக்கு அதிகா... மேலும் பார்க்க

யுஜிசி-நெட் 2024: வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரமில்லை: சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்

கடந்த ஆண்டு நடைபெற்ற யுஜிசி-நெட் தோ்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் விசாரணையை நிறைவுசெய்து இறுதி அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. டாா்க்நெட் வலைதளத்தில் வினாத்தாள் கசிந்து ... மேலும் பார்க்க

வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்: தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு: இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

புது தில்லி, ஜன. 30: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையுடன் வெள்ளிக்கிழமை (ஜன. 31) தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்த... மேலும் பார்க்க

கும்பமேளா நெரிசல் எதிரொலி: கூட்ட மேலாண்மை நடவடிக்கைகளில் உ.பி. அரசு தீவிரம்

மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்த நிலையில், பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சியாக சிறந்த கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள் உத்தர பிரதேச அரசால் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மௌனி அமாவா... மேலும் பார்க்க

கும்பமேளா சம்பவம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிா்க்கட்சிகள் கோரிக்கை: அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும்-மத்திய அரசு

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் 30 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய... மேலும் பார்க்க