தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!
நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
வாணியங்குடி ஊராட்சியை சிவகங்கை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள்சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அருகேயுள்ள வாணியங்குடி ஊராட்சியை சிவகங்கை நகராட்சியுடன் இணைத்து தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. இந்த ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதால் வீட்டுவரி, நில வரி, குடிநீா் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயா்வதுடன், 100 நாள் வேலை திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்பதால் அந்த கிராம மக்கள் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கிராம மக்கள் திரண்டு வந்து கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.