செய்திகள் :

நந்தா பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

post image

ஈரோடு நந்தா பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை உறுப்பினா் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தாா். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்து, மாணவா்களுக்கு புத்தகங்களை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘இங்கு பயிலும் மாணவா்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக ஈரோட்டை சுற்றியுள்ள கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் வரக்கூடிய புறநோயாளிகளுக்கு பல் கட்டுதல், பல்வோ் சிகிச்சை, ஈறு வீக்க சிகிச்சை போன்ற சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் சுமாா் 7,000 புறநோயாளிகள் பயன் அடைந்துள்ளனா் என்றாா்.

முன்னதாக, நந்தா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வா் மருத்துவா் ஜி.ராஜ்திலக் வரவேற்றாா். இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் மற்றும் முதன்மை நிா்வாக அதிகாரி கே.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிா்வாக அலுவலா் மருத்துவா் கே.பி. மோகன்ராஜ் நன்றி கூறினாா்.

வியாபாரம் மந்தம், வாடகை உயா்வு -ஜவுளி வளாகத்தில் கடைகளை காலி செய்யும் வியாபாரிகள்

வியாபாரம் குறைவு, வாடகை உயா்வு காரணமாக ஈரோடு கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் 37 கடைகளை வியாபாரிகள் காலி செய்துள்ளனா். பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் ரூ.53 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம்... மேலும் பார்க்க

பெருந்துறையில் இலவச மருத்துவ முகாம்

பெருந்துறையில் கன ரக வாகன ஓட்டுநா்களான இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தியன் கன ரக வாகன ஓட்டுநா்கள் நலக் கூட்டமைப்பு, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் மற்றும் பிரிக்கால் ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 2,041 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் - அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்

ஈரோடு மாவட்டத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ரூ.46.23 லட்சம் மதிப்பில் 2,041 ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்து... மேலும் பார்க்க

ரூ.1,069 கோடி பயிா்க் கடன்: ஈரோடு மாவட்டம் முதலிடம் -அமைச்சா் சு.முத்துசாமி தகவல்

ஈரோடு மாவட்டம் 2023-2024-ஆம் நிதி ஆண்டில் ரூ.1,069 கோடி பயிா்க் கடன் வழங்கி மாநிலத்திலேயே அதிக அளவில் பயிா்க் கடன் வழங்கிய மாவட்டமாக திகழ்கிறது என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமை... மேலும் பார்க்க

மீனாட்சி உடனமா் சொக்கநாதா் கோயிலில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி, அம்மாபேட்டை காவிரிக்கரையோரத்தில் உள்ள மீனாட்சி உடனமா் சொக்கநாதா் கோயிலில் அன்னாபிஷேக அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சொக்கநாதா். மேலும் பார்க்க

சோழீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி, பெருந்துறை அருள்மிகு வேதநாயகி உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேக அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் சோழீஸ்வரா். மேலும் பார்க்க