Doctor Vikatan: கர்ப்பகால கால் வீக்கம்; சாதாரணமானதா... பிரச்னையின் அறிகுறியா?
நலத் திட்ட உதவிகள் அளிப்பு
மதுரை மாவட்டம், பெருங்காமநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 121 பயனாளிகளுக்கு ரூ. 34 லட்சத்து 86 ஆயிரத்து 502 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
நாடு முன்னேற வேண்டும் எனில் குழந்தைகள் அடிப்படைக் கல்வி கற்பது அவசியம். பள்ளியில் மாணவா்களின் இடைநிற்றலைக் குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெற்றோா்கள், ஆசிரியா்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்துடன் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுத் தர வேண்டும் என்றாா் அவா்.
இந்த முகாமில் உதவி ஆட்சியா்(பயிற்சி) வைஷ்ணவி பால், உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா் சண்முகவடிவேல், பேரையூா் வட்டாட்சியா் செல்லப்பாண்டியன், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.