செய்திகள் :

நல்ல நாள் இன்று!

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

Dinapalan - 14.01.2025

மேஷம்

இன்று பணவரவுகளில் இருந்து வந்த தடைகள்விலகி மேன்மையான பலன்கள் ஏற்படும். கடன்கள் சற்றுக் குறையும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை நிலவும். எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

ரிஷபம்

இன்று கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

மிதுனம்

இன்று அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்.மாணவர்கள் கல்வியில் படிப்படியான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கடகம்

இன்று தேவையற்ற பொழுதுபோக்குகளையும் நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பதன்மூலம் நற்பலனைப் பெற முடியும். ஓரளவுக்கு சேமிப்பு பெருகும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணம் பலவழிகளில் வந்து குவியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

கன்னி

இன்று வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் அமையும். புத்திரவழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் மனமகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்

இன்று அரசியல்வாதிகள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் ஆதரவைப் பெறுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் அமையும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

தனுசு

இன்று சிலருக்கு வாய்ப்புகள் வந்து குவிவதால் பொருளாதாரநிலையும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். இல்லத்தில்

நெய் தீபமேற்றுவது நல்லது. பரிகாரம் செய்வது, துர்க்கையம்மன், விநாயகர் வழிபடுவது மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

மகரம்

இன்று எதிர்பாராத வீண்விரயங்கள், தேவையற்ற செலவுகள் உண்டாகும். பணவிஷயத்தில் மட்டும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

கும்பம்

இன்று மனநிம்மதி குறையும். எதிர்பாராத வீண்பிரச்சினைகளாலும் மனக்குழப்பம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்

இன்று உற்றார்-உறவினர்களிடையே வீண் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். திருமண சுபகாரிய முயற்சிகளுக்கான பேச்சு வார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 15.01.2025மேஷம்இன்று முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக்கடைப்பிடிப்பது, பிறர் விஷயங்களில... மேலும் பார்க்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு - புகைப்படங்கள்

மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டியில், வழக்கமான வாடிவாசலாக இல்லாமல் ரயில் தண்டவாள அமைப்பில் நீளமான வாடிவாசல் அமைக்கப்பட்டது.ஆன்லைன் மூலம் தகுதி சான்றிதழ் பெற்ற காளைகள்... மேலும் பார்க்க

பொங்கல் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெண் காவலர் ஒருவர்.தை மாதம் முதல் நாள் தை திருநாளாகவும், தமிழர் திருநாளாகவும், பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.பொங்கல் விழாவையொட்டி புதிய பானைகள... மேலும் பார்க்க

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150வது நிறுவன நாள் விழா - புகைப்படங்கள்

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150 வது நிறுவன நாள் கொண்டாட்டங்களின் போது இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உடன் உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் செலஸ்டே சாலோ மற்றும் பிரதமர் நரேந்திர மோடி.தில்லியில் நடை... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: பணப்பெட்டியை எடுத்தாரா முத்துக்குமரன்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுத்தாரா? அல்லது நேரத்தை தவிரவிட்டாரா என்பது குறித்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.பிக் பாஸ் சீசன் 8... மேலும் பார்க்க

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் சாகா? சன் பிக்சர்ஸ் புதிய அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸின் புதிய அறிவிப்பு ரசிகர்களிடையே ஆர்வத்தைக் கூட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2023ல் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் ம... மேலும் பார்க்க