செய்திகள் :

நவ. 19-ல் பொதுக் கணக்கு குழு கூட்டம்: செபி தலைவருக்கு சம்மன் அனுப்பவில்லை!

post image

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் அடுத்த கூட்டத்தில் ஆஜராக செபி தலைவர் மாதவி புச்சுக்கு இதுவரை சம்மன் அனுப்பப்படவில்லை.

செபி தலைவர் மாதவி புச் மீது ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், அக். 24 நடைபெற்ற பொதுக் கணக்கு குழு கூட்டத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி அந்த குழுவின் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான கே.சி.வேணுகோபால் சம்மன் அனுப்பியிருந்தார்.

இதையும் படிக்க : இலங்கை நாடாளுமன்றத் தோ்தல்: அதிபா் அநுரகுமார திசாநாயக கட்சி முன்னிலை!

இந்த கூட்டத்தில் ஆஜராவதில் இருந்து மாதவி புச் விலக்கு கேட்ட நிலையில், அந்த கோரிக்கையை ஏற்க கே.சி.வேணுகோபால் மறுத்துவிட்டார்.

கூட்டம் நடைபெறும் கடைசி நேரத்தில் சொந்த காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக மாதவி புச் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மற்றொரு நாளில் ஆஜராக கே.சி.வேணுகோபால் அனுமதி அளித்தார்.

இந்த நிலையில், அடுத்த பொதுக் கணக்கு குழு கூட்டத்தில் ஆஜராக செபி தலைவருக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வருகின்ற நவ. 19-ஆம் தேதி பொதுக் கணக்கு குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக மக்களவை வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த கூட்டத்தில் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் சம்பந்தப்பட்ட நிதி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த நிலக்கரி அமைச்சக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செபி தலைவர் மாதவி புச் அல்லது செபி உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக குறிப்பிடவில்லை.

தீவைக்கும் முன் கொடூரமாக துன்புறுத்தப்பட்ட மணிப்பூர் பெண்: உடல் கூறாய்வு அறிக்கை

மணிப்பூரில், கடந்த வாரம், மூன்று குழந்தைகளுக்கு தாயான 31 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிருடன் தீ வைத்து எரிக்கப்படுவதற்கு முன்பு, கொடூரமாக துன்புறுத்தப்பட்டிருப்பதாக உடல் கூறாய்வு ... மேலும் பார்க்க

தில்லியில் 3-வது நாளாக 'கடுமை' பிரிவில் காற்றின் தரம்!

தில்லியில் தொடர்ந்து 3-வது நாளாக காற்றின் தரம் 'கடுமை' பிரிவில் உள்ளது. தில்லியில் நிகழாண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவுக்குச் சென்றது. இதனால் காற்று மாசுத் தடுப்பு நடவடிக... மேலும் பார்க்க

அதானி வீட்டில்தான் அதிகாரப் பகிர்வு பேச்சு நடந்தது! சரத் பவார்

பாரதிய ஜனதா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் கூட்டம் அதானி வீட்டில்தான் நடந்தது என்று தேசியவாத காங்கிரஸ்(பவார் அணி) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.மேலும், தில்லியில் உள்ள அதானி வீட்ட... மேலும் பார்க்க

பிர்சா முண்டா பிறந்தநாள்: பிரதமர் மோடி அஞ்சலி!

பழங்குடியினர் விடுதலைப் போராட்டவீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். மேலும், பிர்சா முண்டா நாட்டின் பெருமைக்காகவும், பெருமையைக் காக்கவும் எல்லாத்தையும் தி... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: 6,382 விதிமீறல் புகார்கள், ரூ.536 கோடி பறிமுதல்!

மகாராஷ்டிரத் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 6,382 புகார்கள் தேர்தல் ஆணையத்திடம் பதிவாகியுள்ளன. மேலும், ரூ.536 கோடி, பரிசுப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மகாராஷ்டித்துக்கு கடந்த அக்டோபர் மாதம்... மேலும் பார்க்க

சபரிமலை மண்டல பூஜை: இன்று மாலை நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக இன்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது.காா்த்திகை மாதம் தொடங்கி, மகரஜோதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்... மேலும் பார்க்க