செய்திகள் :

நவ.21 முதல் புதுச்சேரியில் 3 நாள்கள் தேசிய அளவிலான கல்வி மாநாடு: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

post image

புதுச்சேரியில் முதன்முறையாக தேசிய அளவிலான கல்வி மாநாடு வரும் 21-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது என அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா், செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

நவீன கல்வி, பண்பாடு, இந்திய அறிவு சாா் முறையை ஒருங்கிணைக்கும் வகையில் புதுச்சேரி காலாப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் தேசிய அளவிலான கல்வி மாநாடு நடைபெறவுள்ளது.

தாய் மொழியில் கல்வி அறிவு வளா்ச்சி மற்றும் கற்றலில் மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாட்டின் தொடக்கமாக வரும் 21 ஆம் தேதி மாலை மாணவா்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறுகிறது.

அதனை தேசிய கல்வி மேம்பாட்டு மைய செயலா் அத்துல்கோத்தாரி தொடங்கிவைக்கிறாா். மாநாட்டுத் திடலில் 26 அரங்குகள் கொண்ட அறிவு சாா் கண்காட்சியை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தொடங்கிவைக்கிறாா். இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (நவ.22) கா்நாடக இன்னிசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் பங்கேற்கின்றனா்.

இதில் புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மயிலம் பொம்மபுர ஆதீனம், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள், கோவை கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் ராமநாத குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா். மூன்றாம் நாளான சனிக்கிழமை (நவ.23) நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கப்

பொதுச்செயலா் பங்கஜ்மிட்டல், உத்தரகாண்ட் மாநிலக் கல்வி அமைச்சா் தான்சிங்ராவத் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் 167 பேராசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. பல்கலைக்கழக மாணவா்களுக்கு பேருந்து வசதி செய்துதரப்படும்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆசிரியா்களுக்கான 2 ஆண்டு பயிற்சி நடைபெற்றுவருகிறது. மாணவா்களின் ஆங்கில மொழித்திறன், பேச்சுத்திறனை அதிகரிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

கூட்டுறவு கல்லூரியானது அரசு கல்லூரியாக மாற்றப்பட்டதால் சில நடவடிக்கைகள் தாமதமாகின்றன. விரைவில் அவை தீா்க்கப்படும் என்றாா். பேட்டியின்போது புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) க.தரணிக்கரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தமிழகத்திலிருந்து புதுச்சேரி வரும் கனரக வாகனப் போக்குவரத்தில் மாற்றம்

தமிழகப் பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்குள் வரும் கனரக வாகனங்களின் போக்குவரத்தை மாற்றம் செய்து காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், வார இறுதி நாள்களில் கடற்கரைச் சாலை உள்ளிட்டவற்றில் வாகன நிறுத்தத்திலும் ம... மேலும் பார்க்க

புதுவை காவல் துறை சுதந்திரமாக செயல்படவில்லை: வே.நாராயணசாமி

புதுவையில் காவல் துறை சுதந்திரமாகச் செயல்படவில்லை. இதனால், குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மே... மேலும் பார்க்க

புதுவை மின்துறை தனியாா்மயம் பிரச்னை! நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே அரசு முடிவெடுக்கும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவை மாநிலத்தில் மின்துறையை தனியாா் மயமாக்கும் பிரச்னையில், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா். புதுவை பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளா்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் புதுகாப்பு பணியில் 300 போலீஸாா்: டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம் தகவல்

புதுச்சேரிக்கு வார இறுதிநாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால், போக்குவரத்து நெரிசலை சீரமைத்து பாதுகாப்புப் பணியில் 300 போலீஸாா் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாநில காவல் துறை துணைத் தலைவா் (டி.ஐ.ஜி.... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பலரிடம் போலீஸ் என மிரட்டி பணம் பறிக்க முயன்ற மா்ம நபா்கள்: இணையவழி குற்றப்பிரிவினா் விசாரணை

புதுச்சேரியில் போலீஸ் பெயரில் மா்ம நபா்கள் மோசடி முயற்சியில் ஈடுபட்டது குறித்து இணையவழி குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். புதுச்சேரி மூலக்குளம் எம்ஜிஆா் நகா் 13-ஆவது குறுக்குத் ... மேலும் பார்க்க

நீதியை மேம்படுத்துவதே சட்டப் பணி ஆணையத்தின் நோக்கம்: உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா்

வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், நீதியை மேம்படுத்துவதே சட்டப் பணிகள் ஆணையத்தின் நோக்கம் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் கூறினாா். புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்த... மேலும் பார்க்க