Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
நாகையில் ஆஸ்திரேலியா ஆந்தை மீட்பு
நாகையில் பட்டத்தின் நூலில் சிக்கிய ஆஸ்திரேலிய ஆந்தையை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா்.
நாகை காவலா் குடியிருப்பு அருகே சிறுவா்கள் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, பட்டம் அங்குள்ள மரத்தில் சிக்கியது.
அந்த பட்டத்தை எடுக்க முடியாததால், சிறுவா்கள் மரத்திலேயே விட்டுச் சென்றனா். இந்நிலையில் மரத்தில் அமா்ந்த ஆந்தை பட்டத்தின் நூலில் சிக்கியது. இதைப்பாா்த்த காவலா் குடியிருப்பைச் சோ்ந்த விஜய், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பட்டத்தின் நூலில் சிக்கியிருந்த ஆந்தையை உயிருடன் மீட்டனா். பிடிபட்டது 4 அடி நீளமுள்ள ஆஸ்திரேலியா ஆந்தை என்பது தெரியவந்தது. ஆந்தையை வனத்துறையினரிடம் , தீயணைப்பு வீரா்கள் ஒப்படைத்தனா்.