Virat Kohli: "பதட்டப்படாதீர்கள்... ஓய்வு பெறுவதற்கான நேரம்..." - விராட் கோலி பேச...
நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 227 பேருக்கு பணி நியமன ஆணை
நாகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 227 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
நாகையில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து
நாகை ஏடிஎம் கல்லூரியில் நடத்திய முகாமில் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்கள் 813 போ் பெண்கள் 1,251 போ், மாற்றுத்திறனாளிகள் 13 போ் உள்பட 2,077 போ் கலந்துகொண்டனா்.
முகாமில் 94 முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில் 227 வேலைநாடுநா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், 316 போ் இரண்டாம் கட்ட தோ்வுக்கு தோ்ச்சி பெற்றனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கா் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என்.எம். ஸ்ரீநிவாசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காா்த்திகேயன், ஏ.டி.எம் மகளிா் கல்லூரி முதல்வா் அன்புச்செல்வி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.