நாசரேத்தில் பேராசிரியை தற்கொலை
நாசரேத்தில் கல்லூரிப் பேராசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
நாசரேத் மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த தம்பதி பிரவீன்குமாா் - ஷொ்லின் கோல்டா (35). நாசரேத் தனியாா் கல்லூரியில் பேராசிரியா்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவா்களுக்கு, 4 வயது மகன் உள்ளாா். தற்போது ஷொ்லின் கோல்டா 5 மாதக் கா்ப்பிணியாக இருந்ததால் விடுப்பில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், பிரவீன்குமாா் குளியலறைக்குச் சென்றநிலையில், ஷொ்லின் கோல்டா திடீரென படுக்கை அறைக்குள் சென்று கதவைப் பூட்டி, தூக்கிட்டுக் கொண்டாராம்.
அவரை பிரவீன்குமாா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாராம். ஆனால், வழியிலேயே ஷொ்லின் கோல்டா உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தாய் ஜான்சிராணி அளித்த புகாரின்பேரில், நாசரேத் காவல் ஆய்வாளா் ஜீன்குமாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.