செய்திகள் :

நானும் சுந்தர்.சியும் 15 ஆண்டுகள் இணையாததற்கு இதுதான் காரணம்: வடிவேலு

post image

கேங்கர்ஸ் படம் குறித்து நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.

மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.

முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக சுந்தர். சி, நாயகியாக கேத்ரீன் தெரசா முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏப். 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்வு நேற்று (ஏப்.16) சென்னையில் நடைபெற்றது. இதில், சுந்தர்.சி, வடிவேலு உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய வடிவேலு, “நானும் சுந்தர்.சியும் வின்னர் திரைப்படத்திற்குப் பின் கேங்கர்ஸ் படத்தில் மீண்டும் இணைந்துள்ளோம். இடைப்பட்ட 15 ஆண்டுகளில் நாங்கள் பணியாற்றவில்லை. அதற்கு காரணம், பலரும் எங்களைப் பிரிக்க முயற்சி செய்ததுதான்.

சுந்தர்.சி, வடிவேலு

நம்மூரில் 4 பேர் சேர்ந்திருந்தால் பலருக்கும் பிடிப்பதில்லை. வில்லத்தனமாக சொல்லாத ஒன்றை இன்னொருவரிடம் சொல்லி பிளவை ஏற்படுத்துகின்றனர். இப்படி பல ஆண்டுகள் நாங்கள் பிரிந்திருந்தோம். ஆனால், பெரிதாகத் தெரியவில்லை. கேங்கர்ஸ் திரைப்படம் குடும்பமாகவே ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது. மீம்களை உருவாக்க மிகச்சரியான படம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: சூரியின் அடுத்த பட அப்டேட்!

புதிய தொடக்கம்.... அமீர் - பாவனி திருமணம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களான அமீர் - பாவனி ஜோடிக்கு இன்று (ஏப். 20) திருமணம் நடைபெற்றது. நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். இது குறித்த படங்களை அமீர... மேலும் பார்க்க

இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி!

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 4-3 என த்ரில் வெற்றி பெற்றது. பார்சிலோனா அணி லா லீகா தொடரில் தனது 32-ஆவது போட்டியில் செல்டா டி விகோ அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் 15,52,62ஆவது நிமிஷங்களி... மேலும் பார்க்க

தமன்னாவின் ஒடேலா 2 தோல்வியா? வசூல் எவ்வளவு?

நடிகை தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படத்தின் வசூல் விவரத்தினை படக்குழு பகிர்ந்துள்ளது. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா நட... மேலும் பார்க்க

பூங்காற்று திரும்புமா: புதிய தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

பூங்காற்று திரும்புமா என்ற தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல்வரை' தொடரின் தழுவலாக எடுக்கப்பட்ட மோதலும் காதலும் தொடரின் நாயகன் சமீர் நட... மேலும் பார்க்க

தக் லைஃப் முதல் பாடல்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!

நடிகர் கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடல் டிரெண்டிங்கில் முதலிடத்தில் நீடிக்கிறது.கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் ச... மேலும் பார்க்க

தனுஷ் குரலில் வெளியான குபேரா பட பாடல்!

குபேரா படத்தின் முதல் பாடல் நடிகர் தனுஷ் குரலில் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர்.ப... மேலும் பார்க்க