தனுஷ் குரலில் வெளியான குபேரா பட பாடல்!
குபேரா படத்தின் முதல் பாடல் நடிகர் தனுஷ் குரலில் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர்.
பான் இந்தியப் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்குக் குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
குபேரா திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குபேரா படத்தின் முதல் பாடலான ’போய் வா நண்பா’ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பாடலுக்கான வரிகளை விவேகா எழுத நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.
அதேபோல், தெலுங்கில் ‘போய் ரா மாமா’ , மலையாளத்தில் ‘போயிவா நண்பா’, கன்னடத்தில் ‘ஹோகிபா கெலேயா’ மற்றும் ஹிந்தியில் ‘ஜாகே ஆனா யாரா’ ஆகிய தலைப்புகளில் பாடல் வெளியாகியுள்ளது.