"நான் கன்னட நடிகர் மட்டுமல்ல, பிரிவினை வேண்டாம்" - காந்தாரா நடிகர் ரசிகருக்குச் சொன்ன பதில்!
2022-ம் ஆண்டு 'காந்தாரா' படத்திற்குக் கிடைத்த நாடுதழுவிய வரவேற்பை அடுத்து, இப்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
ஈஸ்வர பூந்தோட்டமான காந்தாரா வனத்தையும், தனது மக்களையும் காக்க அரச வம்சத்தினரை எதிர்த்தும், அரக்க சக்தியை எதிர்த்தும் நாயகன் போராடுவதும், குலங்களுக்கும் அரசுக்குமான போரும், அவர்களின் தெய்வ வழிபாடும்தான் இதன் கதைக்களம்.
இப்படத்தில் பொறுப்பற்ற, ஆணவமிக்க அகம்பாவ மிக்க குலசேகர அரசனாக நடித்து, கவனம் ஈர்த்திருக்கிறார் நடிகர் குல்ஷன் தேவய்யா.

Kantara: Chapter 1 Review: அசரடிக்கும் மேக்கிங் - `காந்தாரா - 2' தனித்து நிற்பது எங்கே?
ஆணவம், அகம்பாவம், வெறுப்பு, சூழ்ச்சி, கோழைத்தனமான வீரம், இரக்கமற்ற கொடூர குணம் என அத்தனை உணர்ச்சிகளையும் கொண்டு ராஜ ஆட்டம் ஆடி பார்வையாளர்களுக்குக் கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்கி, கதாபாத்திரத்திற்கு அத்தனை நியாயம் சேர்த்திருக்கிறார் குல்ஷன்.
சமூகவலைதளங்களில் அவரின் அட்டகாசமான அலட்டல் உருட்டல் நடிப்பிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கும் நடிகர் குல்ஷன் தேவய்யா, "கடந்த சில நாள்களாக வரும் பாராட்டுகளைக் கேட்டுக் கேட்டு அசந்துபோயிருக்கிறேன். தயவு செய்து இந்தப் பாராட்டுகளை நிறுத்திவிடாதீர்கள்.
Thats the difference betn Hindi and non-Hindi audience. For Hindi audience you are an actor ashte but the regional audience own you. Eva nammava eva nammava!
— FilmiPurusha (@FPurusha) October 4, 2025
உண்மையில் இந்தப் பாரட்டுக்கெல்லாம் நான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும், "இந்தி பார்வையாளர்களுக்கு நீங்கள் ஒரு நடிகர், கன்னட ரசிகர்களான நாங்கள் உங்களை சொந்தம் கொண்டாடி அணைத்துக்கொள்வோம்" என்ற எக்ஸ் தள பதிவிற்குப் பதிலளித்த நடிகர் குல்ஷன், "உங்கள் உணர்வை நான் மனதார வரவேற்கிறேன். பிரிவினை வேண்டாம், எல்லாம் நம்முடைய மண், எல்லாம் நம் மொழிதான். நான் சினிமா மற்றும் கலைக்குச் சொந்தமானவன்" என்று பதிலளித்திருக்கிறார்.
இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.