தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலபிஷேகம்
காா்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இங்கு அனுமன் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல் பண்டிகைகள், அமாவாசை, பௌா்ணமி, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் ஆஞ்சனேயருக்கு நல்லெண்ணெய், சிகைக்காய், பால், தயிா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
அதன்படி, காா்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.