செய்திகள் :

நாமக்கல்: ஓடும் பேருந்திலிருந்து கழன்று விழுந்த கதவு... அரசு பேருந்தின் அவலநிலை!

post image

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் கே1 அரசு பேருந்து தினந்தோறும் சென்று வருகிறது. பேருந்தை ஓட்டுநர் ராமு என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் குமாரபாளையத்தில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி ஆவத்திபாளையம் என்ற பகுதி அருகே இன்று காலை அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் மாணவ, மாணவியரும் இலவச மகளிர் பேருந்து என்பதால், ஈரோட்டிற்கு பணிக்கு செல்லும் பெண்கள் என 60-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது பள்ளி நேரம் என்பதால் ஏராளமான மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் நின்றபடியே பயணம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அரசு பேருந்து

ஆவத்திப்பாளையம் பேருந்து நிறுத்த பகுதி அருகே பயணிகளை ஏற்றுவதற்காக அரசு பேருந்து நின்றது. அங்கிருந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து மெதுவாக சென்று ஒரு வேகத்தடையின் மேலே ஏறி இறங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்தின் பின்புற படிக்கட்டு பகுதி கழண்டு கீழே விழுந்தது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பார்த்த போது, பேருந்தின் பின்புறப் படிக்கட்டு பகுதி துருப்பிடித்த நிலையில் கீழே விழுந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தற்காலிகமாக கயிறு மூலமாக பேருந்தின் படிக்கட்டு மற்றும் கதவு பகுதி கட்டப்பட்ட நிலையில், பேருந்து பவானி போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு செல்லபட்டது. அதிர்ஷ்டவசமாக படியில் நின்று பயணித்தவர்கள் உயிர் தப்பினர். காலை நேரத்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்து பின்புறம் படிக்கட்டு பகுதி கழண்டு விழுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும்‌ பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் ஏறி சென்றனர்.

மும்பை: பாலத்தின் தடுப்பை உடைத்து கடலுக்குள் பாய்ந்த கார்; குடிபோதையில் கார் ஓட்டிய நபர் மீது வழக்கு

மும்பையின் மேற்கு பகுதியை தென்பகுதியோடு இணைக்கும் விதமாக கடற்கரையையொட்டி கடற்கரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கடலில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்தக் கடல் பாலத்தில் பதிவாலா ... மேலும் பார்க்க

தென்காசி: காதலுடன் சென்ற சிறுமி விபத்தில் பலி; உறவினர்கள் போராட்டம்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் என்பவரது 16 வயது மகள் பதினோராம் வகுப்பு படித்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மரத்தொழில் செய்து வந்த ரமேஷ் என்ற இளைஞரைக் காதலித்த... மேலும் பார்க்க

சேலம்: சாலையைக் கடக்க முயன்ற தலைமைக் காவலர்; லாரி மோதி பலியான சோகம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (40) என்பவர் சேலம் மாநகர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள்... மேலும் பார்க்க

``உங்க பணம், 1 ரூபாய் கூட குறையாது'' - விபத்தில் சிக்கியவர் குடும்பத்தை நெகிழ வைத்த டி.எஸ்.பி!

தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (44). இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் சந்திராவுடன் வசித்து வருகிறார். ராஜாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தனக்க... மேலும் பார்க்க

``சாப்பிட வந்தபோது என் தாயை இழந்துவிட்டேன்'' - ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனை தீவிபத்து; 8 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தீவிபத்து ஏற்... மேலும் பார்க்க

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து - பதறிய மக்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மயிலாடுதுறை கிராமத்தில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீப... மேலும் பார்க்க