Karur : 'அண்ணனா நினைச்சுக்கோங்க; நேர்ல வரேன்' - கரூர் குடும்பங்களிடம் வீடியோ கால...
தென்காசி: காதலுடன் சென்ற சிறுமி விபத்தில் பலி; உறவினர்கள் போராட்டம்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்
தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் என்பவரது 16 வயது மகள் பதினோராம் வகுப்பு படித்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மரத்தொழில் செய்து வந்த ரமேஷ் என்ற இளைஞரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அக்டோபர் 5ஆம் தேதி அன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ரமேஷ் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கியபோது கட்டுப்பாட்டை இழந்து இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் இருந்த சிறுமி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ரமேஷ் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் தற்போது விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்பவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிறுமியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற காதலன் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்த சிறுமியின் உறவினர்கள் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.