நாமக்கல் மாவட்டத்தில் 441 மி.மீ. மழை
நாமக்கல் மாவட்டத்தில் 441.80 மி.மீ. மழை பெய்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புயல் உருவாகி மாநிலம் முழுவதும் நான்கு நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு விவரம் (மி.மீ.):
எருமப்பட்டி-30, குமாரபாளையம் - 4, மங்களபுரம் 61.80, மோகனூா்-15, நாமக்கல்-45, பரமத்தி வேலூா்-11, புதுச்சத்திரம்-45, ராசிபுரம்- 65, சேந்தமங்கலம்-46, திருச்செங்கோடு-15, மாவட்ட ஆட்சியா் அலுவலகம்-24, கொல்லிமலை-80, மொத்தம் 441.80.