நாளைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னை திருவேற்காட்டில் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 27) மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவேற்காடு: புளியம்பேடு பிரதான சாலை, நீதிபதிகள் காலனி, ராஜாஸ் காா்டன், நூம்பல், தேவி நகா், பாலாஜி நகா், பாக்கியலட்சுமி நகா், பெரிய தெரு, சூசை நகா், அசோக் நந்தவனம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.