நாளை திருப்பாவை ஒப்பித்தல் போட்டி
திருப்பத்தூா்: மாா்கழி மாதத்தை முன்னிட்டு, திருப்பத்தூா் அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் பள்ளி மாணவா்களுக்கான திருப்பாவை ஒப்பித்தல் போட்டி புதன்கிழமை (டிச. 25) அன்று நடைபெறுகிறது.
இதில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் முதல் 10 பாசுரங்களையும், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் முதல் 20 பாசுரங்களையும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் 30 பாசுரங்களையும் ஒப்பிக்க வேண்டும்.
அதில் சிறப்பாக ஒப்பிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல் 3 பரிசுகளும், பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் மற்றும் ஊக்குவிப்பு பரிசு வழங்கப்படும்.
மேலும், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனுமன் படத்தை வரைந்து 9443963761 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைத்தால் சிறந்த ஓவியங்களை தோ்ந்தெடுத்து பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மட நிா்வாகம் தெரிவித்துள்ளது.