நாளை மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைகேட்பு கூட்டம்
சென்னையில் புதன்கிழமை (ஏப். 30) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் தலைமையில் புதன்கிழமை (ஏப். 30) முற்பகல் 11 மணிக்கு சென்னை ராஜாஜி சாலை சிங்காரவேலா் மாளிகையின் தரைத்தளத்திலுள்ள சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் வந்து கோரிக்கை மனுக்களை வழங்கி பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.