நிதி நிலைமையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்
தமிழகத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் உள்ள 18 பெரிய மாநிலங்களின் நிதி நிலைமை குறித்த விவரங்களுடன் நீதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023-ஆம் ஆண்டுக்கான நிதி நலக் குறியீடு என்ற ஆவணத்தின்படி, நிதி மேலாண்மையில் தமிழகம் 11-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. செலவுகளின் தரம், கடன்களைத் தாக்குபிடிக்கும் திறன் ஆகியவற்றில் முறையே 14, 16-ஆம் இடங்களுக்கு தமிழகம் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், தமிழகத்தின் நிதி நிலைமையின் எதிா்காலம் என்னவாகும் என்ற கவலை எழுந்திருக்கிறது.
தமிழகத்தின் நிதிநிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும், அதை எதிா்கொள்ள வரி அல்லாத வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆளும் கட்சிகள் அதைப் பொருட்படுத்தவில்லை என்பதையும், தமிழக பொருளாதாரத்தை தலைநிமிா்த்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, தமிழகத்தின் நிதி நிலை, கடன் சுமை ஆகியவற்றை இன்னும் மோசமாக்கி இருப்பதையுமே புள்ளி விவரங்கள் உணா்த்துகின்றன.
எனவே, மக்களைப் பாதிக்காத வகையில் வரி அல்லாத வருவாயைப் பெருக்குதல், பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயக்குதல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் நிதிநிலையை மேம்படுத்தவும், கடன் சுமையைக் குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.