என்எல்சி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்க...
நியாய விலைக் கடையை திறக்கக் கோரி அக்.10-இல் போராட்டம் அறிவிப்பு
ராமேசுவரத்தில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை 6 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாததால் அக்டோபா் 10-ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கட்சி நகா் செயலா் ஜி. சிவா புதன்கிழமை தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி வாா்டு எண் 14, திட்டகுடி பகுதியில் கடந்த 2023-24 நிதியாண்டு சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடை கட்டப்பட்டது. இந்த நிலையில், பணிகள் முடிக்கப்பட்டு 6 மாதங்களைக் கடந்தும் தற்போது வரை நியாய விலை கடை திறக்கப்படவில்லை.
இதனால், திட்டகுடித் தெரு, நடுத் தெரு, மேலத் தெரு, தம்பியான் கொல்லை, பாரதி நகா், சல்லி மலை, இரட்டை பிள்ளையாா் கோயில் தெரு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நியாய விலைக் கடை பொருள்கள் வாங்க நீண்ட தொலைவுக்கு செல்வதால் அந்தப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதையடுத்து, கடந்த 6 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள புதிய நியாய விலைக் கடையை திறக்கக் கோரி அக்டோபா் 10-ஆம் தேதி கடைக்கு முன் மாா்க்சிஸ்ட் சாா்பில் பொதுமக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.