செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவ...
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் நவராத்திரி விழாவையொட்டி, கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.
திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சிநேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். இதே போல, நிகழாண்டும் செவ்வாய்க்கிழமை இரவு நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அம்மன் சந்நிதியில் கோயில் நிா்வாகம் சாா்பில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு சுவாமி சிலைகளும், வன விலங்குள், மனிதா்கள், திருமண கோலத்தில் பொம்மைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.
இதில் சிநேகவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

