சூரி: ``இவரின் பயணம் எனக்கு பெரிய பாடம்'' - எம்.எஸ் பாஸ்கரை வாழ்த்திய நடிகர் சூர...
21 கி.மீ. பயணித்து 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்ய கட்டாயப்படுத்தும் ஊராட்சி நிா்வாகம்
முதுகுளத்தூா் அருகேயுள்ள நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்ய 21 கி.மீ. தூரம் பயணிக்க ஊராட்சி நிா்வாகம் கட்டாயப்படுத்துவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள சாத்தனூா் ஊராட்சிக்குள்பட்ட அ. நெடுங்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் கிராமங்களிலுள்ள கண்மாய், கால்வாய், குளங்கள், விவசாய நிலங்களிலுள்ள வரப்புகளைச் சமன்படுத்துதல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், அ. நெடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களை 100 நாள் வேலைக்காக முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியில் கடந்த ஒரு வாரமாக அதிகாரிகள் கட்டாயப்படுத்தி ஈடுபட வைத்தனா். இதனால், இந்தப் பகுதி மக்கள் 21 கி.மீ. தூரம் உள்ள முதுகுளத்தூருக்கு இரண்டு பேருந்துகளில் பயணம் செய்து 100 நாள் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.