அம்பேத்கா் குறித்த பேச்சு: உள்துறை அமைச்சா் அமித் ஷா ராஜினாமா கோரி டிச. 30 இல் ...
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அணியில் மீண்டும் வனிந்து ஹசரங்கா!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (டிசம்பர் 23) அறிவித்துள்ளது.
இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.
அணியில் மீண்டும் வனிந்து ஹசரங்கா
காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறமாலிருந்த இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
இதையும் படிக்க: இதுதான் ஒரே வழி... பும்ராவை எதிர்கொள்ள ஆஸி. வீரர்களுக்கு முன்னாள் வீரர் கொடுத்த அறிவுரை!
இந்தியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு அணியில் அறிமுகமான நுவனிது ஃபெர்னாண்டோ மற்றும் வேகப் பந்துவீச்சாளர் லகிரு குமாரா ஆகியோரும் நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம்
சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியாநாகே, நுவனிது ஃபெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, சமிந்து விக்கிரமசிங்க, அஷிதா ஃபெர்னாண்டோ, முகமது ஷிராஸ், லகிரு குமாரா, இஷான் மலிங்கா.
இலங்கை - நியூசிலாந்து ஒருநாள் தொடர் விவரம்
முதல் ஒருநாள் - ஜனவரி 5, வெலிங்டன்
2-வது ஒருநாள் - ஜனவரி 8, ஹாமில்டன்
3-வது ஒருநாள் - ஜனவரி 11, ஆக்லாந்து
இதையும் படிக்க: இந்திய அணியில் பந்துவீச்சு வலுவாக இல்லை: புஜாரா
நியூசிலாந்துக்கு எதிரான தொடர் நிறைவடைந்த பிறகு, இலங்கை அணி அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.