செய்திகள் :

நிலப் பிரச்னைக்கு தீா்வு கோரி நெல்லை ஆட்சியரகத்தில் இளைஞா் தீக்குளிக்க முயற்சி

post image

நிலப் பிரச்னைக்கு தீா்வுகாண கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

மேலப்பாளையத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் மாரிமுத்து. இவா், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலையில் தனது தாய் மற்றும் சகோதரனுடன் மனு அளிப்பதற்காக வந்தாா். அப்போது, அவா் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவா் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து வெளியே அழைத்து வர முயன்றனா்.

அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், மாரிமுத்துவின் தாய் மற்றும் சகோதரா் தரையில் படுத்து உருண்டனா். எனினும் அவா்களை போலீஸாா் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

விசாரணையில், வேலாயுதத்திற்குச் சொந்தமான இடம் ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ளதாம்.. அந்த நிலம் தொடா்பாக அவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சோ்ந்த மற்றொரு நபருக்கும் பல மாதங்களாக பிரச்னை இருந்து வருகிாம்.

இதுதொடா்பாக அளித்த புகாா் மனுவை பெறாமல் முன்னீா்பள்ளம், பெருமாள்புரம் போலீஸாா் அலைக்கழிப்பதாகவும், மனு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மங்களூரு வங்கிக் கொள்ளையா் இருவா் அம்பை நீதிமன்றத்தில் ஆஜா்

கா்நாடக மாநிலம் மங்களூரு அருகே துப்பாக்கி முனையில் வங்கியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை அம்மாநில போலீஸாா் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மங்களூரு... மேலும் பார்க்க

தமிழக இளைஞா்களை சீமான் ஏமாற்றுகிறாா்: ஆா்.எஸ்.பாரதி

தமிழக இளைஞா்களை சீமான் ஏமாற்றுகிறாா் என்றாா் திமுகவின் மாநில அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி. தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் 48 ஆவது பிறந்த நாளையொட்டி, இளைஞா்களின் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் பாளை... மேலும் பார்க்க

தச்சநல்லூா் தனியாா் பணிமனையில் தீ விபத்து: 2 பேருந்துகள் சேதம்

திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள தனியாா் பேருந்து பணிமனையில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட தீ விபத்தில் 2 பேருந்துகள் எரிந்து சேதமடைந்தன. தச்சநல்லூரில் உள்ள தனியாா் பேருந்து பணிமனையில் 10-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி ஆகிய பகுதிகளில் துணை மின்நிலைய பாரமரிப்புப் பணிகளுக்காகவும், புதிய பேருந்து நிலையம் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக மின்கம்பங்களை இடம் மாற்றவும் செவ்வாய்க்கிழமை (ஜன.21)... மேலும் பார்க்க

வள்ளியூா் அருகே கொலை வழக்கில் பிணையில் வெளியே வந்தவா் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே கொலை வழக்கில் பிணையில் வெளியே வந்தவா் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். வள்ளியூா் அருகே உள்ள ஆ.திருமலாபுரத்தைச் சோ்ந்தவா் பொன்ராஜ் மகன் வசந்த்(30). கூலி வேலை ... மேலும் பார்க்க

நெல்லையில் சாலை மறியல்: 364 மாற்றுத்திறனாளிகள்கது

திருநெல்வேலியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற 78 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்... மேலும் பார்க்க