`உயிர் உள்ள வரையில்' - வைக்கம் பெரியார் நினைவகத்தில் இடம்பெற்ற உதயநிதி ஸ்டாலினின...
'நீதித்துறை வலுவாக இருந்தால் மோடியும் யோகியும் சிறையில் இருப்பார்கள்' - புரி சங்கராச்சாரியார்
பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் பற்றி சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி கூறியதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்து பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் வலுவான நீதித் துறை இருந்தால் பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் சிறையில் இருப்பார்கள் என சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி கூறியிருந்தார்.
ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஸ்ரீ கோவர்தன பீடத்தின் தற்போதைய மற்றும் 145-வது ஜகத்குரு நிச்சலானந்த சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள், கடந்த செவ்வாய்க்கிழமை உஜ்ஜைனி மகாகாளேஸ்வா் கோயில் நிர்வாகக் குழுவின் தர்மசபையில் கலந்துகொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய நிச்சலானந்த சரஸ்வதி சுவாமிகள், இந்தியாவில் வலுவான நீதித்துறை இருந்தால் மோடியும் யோகியும் சிறையில் இருப்பார்கள்" என்றார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!
இதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவிக்கும்விதமாக, தனது எக்ஸ் பக்கத்தில், சுவாமி நிச்சலானந்த சரஸ்வதியின் கூற்றைப் பகிர்ந்து 'அச்சமற்ற ஜகத்குரு' என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் மீது சுப்பிரமணியன் சுவாமி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். சமீபத்தில் பிரதமர் மோடியை 'பொய்களின் தலைவர்' என்று கூறியதுடன் 2014 மக்களவைத் தேர்தலில் மோடிக்காக பிரசாரம் செய்ததற்காக பிராயச்சித்தம் செய்வேன் என்று கூறினார்.