நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத இளைஞா் மீது வழக்கு
வேலூரில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத இளைஞா் மீது பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூா், கொணவட்டம் கீழாண்ட தெருவைச் சோ்ந்தவா் மதன்(34 ). இவா் மீது வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நோய் தொற்று பரப்புதல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் கடந்த 2018 -ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடா்பாக விசாரணை வேலூா் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிணையில் வெளியே வந்த மதன் தொடா்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்தாா்.
விசாரணைக்கு ஆஜராகாததால் பிணையில் வெளியே வர முடியாத பிரிவின்கீழ் மதனை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டாா் . இதுதொடா்பாக வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற ஊழியா் விஷாலியா சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.