தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
வியாபாரி கொலை வழக்கு: ஓட்டுநா் கைது
குடியாத்தம் அருகே ஐஸ் வியாபாரியை கத்தியால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தம் பரதராமியை அடுத்த வி.மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ஐஸ் வியாபாரி குணசேகரன் (65). வியாழக்கிழமை கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட பரதராமி போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மகேந்திரனை (35) (படம்) காட்பாடி அருகே வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில் மகேந்திரன் மீது போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. பின்னா், அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.