சிப்ஸ் முதல் கப்பல் வரை அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்க இலக்கு: பிரதமர் மோடி
"நீ எப்பவும் அவருக்கு விசுவாசமாக இருக்கணும்னு சொல்லிருக்கேன்" - தனுஷாக நடித்த மாஸ்டர் தீகனின் அம்மா
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்ததை அடுத்து, கோவையில் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது. இப்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.

இதில் தனுஷின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் தீகனின் அம்மா பேசுகையில், "நான் கும்பிட்ட சிவனும், முருகனும் சேர்ந்துதான் என் மகனுக்கு இந்த வாய்ப்ப கொடுத்திருக்காங்க. படத்துலயும் என் மகன் பேர் முருகன் என்பதுல ரொம்ப சந்தோஷம்.
என் மகன் எத்தனையோ படம் பண்ணலாம். ஆனால், இந்த 'இட்லி கடை' படம் அவனுக்குப் பெரிய திருப்புமுனையாக இருக்கும். எங்கயோ ஒரு ஓரத்துல இருந்த எங்களைக் கண்டுபிடிச்சு இந்த வாய்ப்பைக் கொடுத்த தனுஷ் சாருக்கு நன்றி. சாகுரவரைக்கும் அந்த நன்றியோட நான் இருப்பேன்.
நீ எப்பவும் அவருக்கு விசுவாசமாக இருக்கணும்னு சொல்லிருக்கேன்! - 'இட்லி கடை'யில் சிறு வயது தனுஷாக நடித்த மாஸ்டர் தீகனின் அம்மா உருக்கம்#Dhanush | #IdliKadai | #VikatanReels | #CinemaVikatanpic.twitter.com/al53Np8AKf
— சினிமா விகடன் (@CinemaVikatan) September 24, 2025
என் மகன் கிட்ட, 'நீ எப்பவும், எவ்வளவு பெரிய ஆளாக உயர்ந்தாலும் தனுஷ் சாருக்கு விசுவாசமாக இருக்கணும்'னு சொல்லியிருக்கேன். என் மகன் நிச்சயம் பெரிய ஆளாக வருவான். தனுஷ் சார விட பெரிய நட்சத்திரமாக வருவான். எண்ணம்போல் வாழ்க்கைன்னு சொல்லுவீங்க தனுஷ் சார். நானும் என் மகன் பெரிய நட்சத்திரமாக வருவானு நினைச்சிட்டே இருக்கேன். என் எண்ணம் நிறைவேறும், அவன் பெரிய ஆளாக நிச்சயம் வருவான்" என்று உணர்ச்சி வசத்துடன் பேசியிருக்கிறார்.