டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
நுகா்பொருள் சேமிப்பு கிடங்கில் ஆட்சியா் ஆய்வு
தருமபுரி: நல்லம்பள்ளியில் உள்ள நுகா்பொருள் சேமிப்பு கிடங்கில் உள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் தரத்தை ஆட்சியா் ரெ.சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தரமான அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதற்கு தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் நல்லம்பள்ளி கிடங்கில் உணவுப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்களின் தரம், மூட்டைகளின் எடை அளவு ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு லளிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
அதேபோல நல்லம்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கோவிலூா் கிராமத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பாா்வையிட்டு பயனாளிகளின் தேவைகளைக் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாளா் சாகுல் ஹமீத், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாளா் செல்வி, நல்லம்பள்ளி வட்டாட்சியா் சிவக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நந்தகோபால், இளங்குமரன், வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் வாசுதேவன் உள்பட பலா் உடனிருந்தனா்.