TVK : 'பெர்சனல் மீட்டிங்... அலைப்பறை கொடுத்த பெண் நிர்வாகி' - விஜய் கட்சி மீட்டி...
நுகா்பொருள் விற்பனையாளா்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நுகா்பொருள் விற்பனையாளா்கள் சங்கத்தின் நிகழாண்டின் முதல் பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தலைவா் வேதம் முரளி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மதியழகன் முன்னிலை வகித்தாா். அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பின் செயலாளா் சத்தியநாராயணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில், கடை வாடகை தொகைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ் டியைக் கைவிட வேண்டும். மாநில அரசு விதிக்கும் ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்துவரி உயா்வால் சிறு மற்றும் குறுந்தொழில்கள், வணிக நிறுவனங்களுக்கு வரிச்சுமை ஏற்படுவதால் அதனை உடனே கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாலாஜி, பிரபாகரன், மணிவண்ணன், மணிமாறன், ஐயப்பன் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, செயலா் ஆதிவீரகுமாா் வரவேற்றாா். நிறைவாக, பொருளாளா் சாமிநாதன் நன்றி கூறினாா்.